Site icon Tamil News

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்?

சர்க்கரை என்றாலே சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது வழக்கம். ஏதோ ஒரு விதத்தில் நாம் சர்க்கரை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

நாம் சாப்பிட கூடிய ஒரு சில தேவையற்ற உணவு பழக்கத்தை நிறுத்தி விட்டாலே, உடலுக்கு எந்தவித நோய்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இளமை குறையாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினாலே போதுமானது.

உடல் எடை :
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால், கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உடல் எடையை குறையும் என ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர். மேலும், தொப்பையால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் இது நல்ல தீர்வை தருகிறது.

இளமை குறையாமல் இருக்க….!
இளமை குறையாமல் இருக்க சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினாலே போதுமானது. இது தோலில் உள்ள செல்களை சிதைக்காமல் வைத்து கொள்ள உதவுகிறது. மேலும், சீக்கிரமே வயதாகாமல் மிக இளமையாக இருக்க உதவுகிறது. அத்துடன் முக சுருக்கங்களும் வராமல் தடுக்கிறது.

இதய நோய் :
சர்க்கரை சாப்பிடும் பழக்கம் கொண்ட பலருக்கு இதய நோய்கள் சாதாரணமாகவே வர கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் இதயத்திற்கு வர கூடிய பாதிப்புகள் குறையக்கூடும். மேலும், இது ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்து கொள்ள உதவுகிறது.

மூளையின் செயல்திறன் :
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் மூளையின் செயல்திறன் அதி வேகமாகவே இருக்கும் என கூறுகின்றனர். மேலும், நல்ல மனநிலையும் உங்களுக்கு ஏற்படும். வேலை பளுவால் எப்போதும் சிடுசிடுவென இருக்கும் பலருக்கு இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்க்கரை நோய் :
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினாலே போதும், சர்க்கரை நோயினால் ஏற்படும் அபாயங்கள் குறைந்து விடும். சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் மூளையின் செயல்திறன் அதி வேகமாகவே இருக்க கூடும். மேலும், நல்ல மனநிலையும் உங்களுக்கு ஏற்படும். வேலை பளுவால் எப்போதும் சிடுசிடுவென இருக்கும் பலருக்கு இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

Exit mobile version