Site icon Tamil News

அதிக கலோரிகளை எரிக்கும் 5 நிமிட நடைபயிற்சி

இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலானோர் தங்கள் ஆரோக்கியத்த்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். குடியிருப்புகளில் உள்ள பூங்காக்கள், கிளப்புகள் மற்றும் சாலைகளில் காலையில், மக்கள் அதிக அளவில் நடந்து செல்வதைக் காணலாம். சிலர் காலையிலும் மாலையிலும் நீண்ட நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். நடைபயிற்சி முழு உடலுக்கும் ஒரு பயிற்சி அளிப்பத்தால், சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படுகிறது.

நடைபயிற்சி (Walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான பயிற்சி. சிறந்த உடற்பயிற்சியாகக் கருதப்படும் நடைபயிற்சியின் மூலம் நீங்கள் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க முடியும். பொதுவாக அதிக வேகமின்றி, சிரமமின்றி நடக்கும் சாதாரண நடைபயிற்சி உடல் வலி, சோர்வுகளை போக்கி உடலை பிட் ஆக வைத்திருக்க உதவும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. இருப்பினும், நீங்கள் நடக்கும்போது பவர் வாக்கிங் முறையைப் பின்பற்றினால், கூடுதல் கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் பருமன மிக வேகமாக குறையும்.

பவர் வாக்கிங் என்றால் என்ன?

பவர் வாக்கிங் என்பது கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது. இப்படி வேகமாக நடப்பதால், கலோரிகள் அதிகம் எரிக்கப்பட்டு, வியர்வை அதிகம் வெளியேறி உடம்பில் உள்ள கழிவுகள் நீக்கப்பட்டு உடல் சுத்தமாகும்.

5 நிமிட பவர் வாக்கிங்

நீங்கள் அலுவலகத்திற்கு செல்லும் போது காலையில், நீங்கள் 5 நிமிடங்களுக்கு பவர் வாக் முயற்சி செய்யலாம். வீட்டில் இருந்து குறிப்பிட்ட இடம் வரை, அல்லது அலுவகத்தை அடைவதற்கு சிறிது தூரம் நடந்து சென்று, 5 நிமிட பவர் வாக்கிங்கை முயற்சி செய்யலாம். இதனால் உடல் எடை குறைவதுடன் மனநலமும் நன்றாக (Health Tips) இருக்கும்.

பவர் வாக்கிங்கில் நீங்கள் எடுத்து வைக்கும் அடிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். நடக்கும்போது குறுகிய அடிகளாக எடுத்து வைக்க வேண்டும். நடக்கும் போது கைகளை வேகத்தில் முன்னும் பின்னுமாக அசைக்க வேண்டியிருக்கும். நடக்கும்போது, ​​முதலில் உங்கள் குதிகால் மற்றும் பின்னர் கால்விரல்கள் தரையை தொட வேண்டும். அதாவது நடக்கும்போது முதலில் குதிகாலை பதிய வைத்து, பின்னர் பாதத்தை பதிய வைக்க வேண்டும். சாதாரண நடைப்பபயிற்சியை விட இவ்வாறு செய்யப்படும் நடைபயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால்தான் இது பவர் வாக்கிங் என்று அழைக்கப்படுகிறது.

நடைபயிற்சி செய்ய 20-25 நிமிட நேரம் உள்ளவர்கள் ஆரம்பத்தில் பவர் வாக் செய்து 3-4 நிமிடங்கள் வார்ம் அப் செய்யலாம். இதற்குப் பிறகு, நீங்கள் சாதாரண நடைபயிற்சியை தொடங்கலாம். ஆனால் இந்த நடைப்பயணத்தில் 5 நிமிடத்திற்கு ஒரு நிமிடம் பவர் வாக் செய்ய வேண்டும். அதாவது 4 நிமிட சாதாரண நடைபயிற்சி மற்றும் 1 நிமிடம் வேகமாக நடக்க வேண்டும். நீங்கள் வகையில் பவர் வாக்கிங் முறையை பின்பற்ற வேண்டும். இந்த வகையில் நீங்கள் 5 நிமிடங்களுக்கு பவர் வாக் மற்றும் 15-20 நிமிடங்களுக்கு சாதாரண நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

உடற்பயிற்சியின் பொற்கால விதியாக 40 நிமிட நடைப்பயிற்சி மிகவும் சிறப்பு என சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் உங்களை ஃபிட்டாக வைத்திருக்க முடியும். எனவே, பிட்னஸில் அக்கறை உள்ளவர்கள் கண்டிப்பாக தினமும் 40 நிமிடங்களை நடைப்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும். 40 நிமிட நடை உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில் சாதாரண வேகத்தில் நடக்கலாம். நீங்கள் விரும்பினால், சிறிது நேரம் ஜாகிங் அல்லது ஓட்டத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது உங்கள் பிட்னஸை பராமரிக்க முக்கியம்.

Exit mobile version