Tamil News

“நாங்க அஜித் ஃபேன்ஸ் தான்… இருந்தாலும் சொல்றோம்..” லியோ சும்மா தெறிக்குது

விஜய்யின் லியோ திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கைதி, விக்ரம் படங்களைத் தொடர்ந்து லியோவையும் தனது யூனிவர்ஸில் இணைத்துள்ளார் லோகேஷ். இதனால் லியோ படத்தை ரசிகர்கள் செம்மையாக என்ஜாய் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் லியோ படத்துக்கு அஜித் ரசிகர்கள் கூறிய விமர்சனம் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவான லியோ திரைப்படம், இன்று முதல் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளனர். லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் லியோ இணைந்துள்ளது சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே லியோவில் மாஸ் காட்டியுள்ளது. முக்கியமாக கைதியில் போலீஸ் கேரக்டரில் நடித்த ஜார்ஜ் மரியான், அதே நெப்போலியனாக என்ட்ரி கொடுக்கும் சீனில் தியேட்டரை அதிருகிறது.

முதல் பாதி முழுவதும் LCU விருந்தாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜய்யின் லியோ படத்தை அஜித் ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துள்ளனர்.

லியோ FDFS பார்த்த அதே உற்சாகத்தில் படம் பற்றியும் பாசிட்டிவாக விமர்சனம் செய்துள்ளனர். நாங்கள் அஜித் ஃபேன்ஸ் தான் என அறிமுகம் செய்துகொண்ட அவர்கள், லியோவில் விஜய் என்னதான் பன்ணிருக்கார்ன்னு தான் பார்க்க வந்தோம். ஆனால், விஜய் அதை Full Fill செய்துவிட்டதாகவும், சும்மா தெறிக்கவிட்டுள்ளார் எனவும் கூறியுள்ளனர்.

படம் முழுக்க சென்டிமென்ட்டாக போனாலும் இப்போதைக்கு நிறைய ஸ்பாய்லர்ஸ் சொல்லக் கூடாது. ஆனால், லியோ படத்தை கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டும் என அஜித் ரசிகர்களே கூறியுள்ளனர்.

அதேபோல், லியோ லோகேஷின் LCUல் இணைந்துள்ளது சர்ப்ரைஸ் எனவும் தெரிவித்துள்ளனர். முக்கியமாக படம் முழுவதும் விஜய் இல்லை என்றாலும், “புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்” என்ற டேக் லைன் மட்டும் வந்துகொண்டே இருக்கிறது.

விஜய், அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோரை விடவும் இதுதான் அதிகமாக வருகிறதாகவும் அஜித் ரசிகர்கள் கூறியுள்ளனர். இறுதியாக விஜய்யின் லியோ ஆயிரம் கோடி வசூல் செய்ய அஜித் ரசிகர்கள் சார்பாக வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version