Site icon Tamil News

அமெரிக்காவில் பட்டம் பெற்ற மாணவர்களை நெகிழ வைத்த செல்வந்தர் – ஒவ்வொருவருக்கும் 1,000 டொலர்

அமெரிக்காவின் டார்ட்மவுத் வட்டாரத்தில் உள்ள Massachusetts பல்கலைக்கழகத்தில் அண்மையில் பட்டம் பெற்ற ஒவ்வொருவருக்கும் அன்பளிப்பாக 1,000 டொலர் கிடைத்தது.

நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த செல்வந்தர் ராப்ர்ட் ஹேல் ஜூனியர் இந்த பணத்தை கொடுத்தார்.

தொலைத்தொடர்பு நிறுவனம் Granite Telecommunicationsஇன் தலைமை நிர்வாக அதிகாரியான அவர் கொடை வள்ளல் என கூறப்படுகின்றது.

வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரும் இன்பம் மற்றவர்களுக்குக் கொடுப்பதில் உள்ளது என ஹேல் கூற மேடைக்கு 2 பெரிய பைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் நிறைய உறைகள் இருந்தன.

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் 2 உறைகள் கிடைக்கும் என்றும் ஒவ்வொரு உறையிலும் 500 டொலர் இருக்கும் என ஹேல் குறிப்பிட்டுள்ளார்.

ஓர் உறையை அன்பளிப்பாக வைத்துக்கொள்ளலாம். இன்னொரு உறையை தேவையுள்ளவர்களுக்குத் தானம்செய்யுங்கள், என்று அவர் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

சமூகத்துக்கும் உலகத்திற்கும் அனைவரின் உதவியும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version