Site icon Tamil News

பாலஸ்தீன்- இஸ்ரேல் தொடர்பில் தெற்கின் சக்திகள் போராடுவதனை வரவேற்கின்றோம்- அருட்தந்தை மா.சத்திவேல்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெற்கின் சக்திகள் போராடுவதனை வரவேற்கின்றோம். அத்தோடு பௌத்த சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் அவ்வாறு செய்தாலே பாலஸ்தீனத்திற்கான போராட்டம் உண்மை உள்ளதாக அமையும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (15.10.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையில் வெடித்திருக்கும் போர் மிகவும் உக்ரமானது. ஒன்றும் அறியாத சாதாரண மக்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள் என இரு பக்கமும் ஆயிரங்களை தாண்டி இதுவரை கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ளனர்.

Exit mobile version