Site icon Tamil News

தமிழ் சமூகத்தினரின் கோரிக்கையை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம் – மோடி!

தமிழ் சமூகத்தினரின் கோரிக்கையை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21.07) பிரதமர் மோடியை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது  பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை – இந்தியாவிற்கு இடையிலான படகு சேவை, எரிசக்தி உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.

இதனையடுத்து இருநாட்டு தலைவர்களும் கூட்டாக  செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

இதன்போதே பிரதமர் நரேந்திர மோடி மேற்படி வலியுறுத்தியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  அண்டை நாடுகள் உடனான கொள்கையில் இலங்கை முதலிடத்தை வகிக்கிறது எனவும், மீனவர்களின் விடயத்தில் மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இரு நாடுகளிடையே வர்த்தகம் போன்றவற்றிற்கு புதிய கதவுகள் திறந்து உள்ளதாகவும், இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தமிழ் சமூகத்தின் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புவதாக தெரிவித்த மோடி,  பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் எனவும் கூறினார்.

Exit mobile version