Site icon Tamil News

சீனா எங்களை ஆள்வதை நாங்கள் விரும்பவில்லை: தைவான் அதிபர் லாய் சிங்-டே

தைவான் தொடர்ந்து சுதந்திரமாகச் செயல்பட விரும்புவதாக அந்நாட்டு அதிபர் லாய் சிங்-டே வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) தெரிவித்தார்.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்களை ஆட்சி செய்வதை நாங்கள் விரும்பவில்லை எனத் தைவான் கட்டுப்பாட்டில் இருக்கும் சீனக் கடற்கரையில் அமைந்துள்ள கின்மென், மாட்சு தீவுகளுக்கு வருகையளித்தபோது அவர் இதனைக் கூறினார்.

தைவானின் அதிபராக மே மாதம் பதவியேற்ற பிறகு, கின்மென் தீவுக்குத் திரு லாய் சிங்-டே வருவது இதுவே முதல்முறை. தைவானின் இரண்டாவது நீரிணை நெருக்கடிநிலையின் தொடக்கமாக அறியப்படும் சீனப் படைகளுடனான மோதலின் 66வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கின்மென் தீவில் இருக்கும் நினைவிடத்தில் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அங்கு படைவீரர்களின் மத்தியில் உரையாற்றிய அவர், தனது மாமா கின்மெனில் பணியாற்றியதால் சீனா – தைவான் போரின் கதைகளைக் கேட்டுத் தான் வளர்ந்ததாகத் திரு லாய் கூறினார்.

சீனாவின் அச்சுறுத்தல்களைத் தைவான் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் சூளுரைத்தார்.

“தைவான் அமைதியை விரும்பும் நாடு. தைவான் நாட்டு மக்கள் மிகவும் அன்பானவர்கள்,” என்றார் அவர்.“தைவான் நீரிணை முழுவதும் அமைதியைக் கொண்டுவருதே எங்களது நோக்கம்,” என அவர் தெரிவித்தார்.

“நாங்கள் சீனாவை மீட்டெடுக்க முயற்சிக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்படவதையும் நாங்கள் விரும்பவில்லை. ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில் எங்களுடைய வாழ்க்கையைத் தொடர நாங்கள் விரும்புகிறோம்,”எனத் திரு லாய் படைத்தலைவர்களிடம் கூறி, தன்னுடைய கூற்று சரி தானே எனக் கேள்வியெழுப்பினார்.கூட்டத்தினர் ‘ஆம்’ என்று உரக்கத் கத்தினர்.

சீனாவின் மிரட்டலை எதிர்கொள்ளும் விதமாகத் தற்காப்பை வலுப்படுத்த, கூடுதலான போர் விமானங்களையும் ஏவுகணைகளையும் தைவான் வாங்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

Exit mobile version