Site icon Tamil News

வயநாடு நிலச்சரிவு – கவலை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ள நிலையில் இதுவரை 195 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களை மீட்பதே முக்கியம் என்றும், மறுவாழ்வு விரைவில் தொடங்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ரஷியா, சீனா மற்றும் மாலத்தீவுகளுக்குப் பிறகு, கேரளம் மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரி பேரழிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்று வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்த சோகமான நிகழ்வில் இறந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல். நிலச்சரிவில் அன்புக்குரியவர்களை இழந்துவாடும் குடும்பங்களுக்கு எங்கள் பிரார்த்தனைகள். பேரிடரில் சிக்கலான மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் துணிச்சல், தைரியத்தை நாங்கள் பாராட்டுகிறோம். மக்களை தொடர்ந்து பாதுகாப்போம். இந்த இக்கட்டான நேரத்திலும் நமது எண்ணங்களில் இந்தியா உள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version