Site icon Tamil News

கிழக்கு உக்ரைனில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகம் : அவசரமாக தோண்டப்பட்ட கிணறுகள்!

கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்கில் குடிநீர் விநியோகம் மற்றும் எரிவாயு தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனெட்ஸ்க் பகுதி முழுவதும் ரஷ்ய இராணுவத்தின் அட்டூழியங்கள் பொது உள்கட்டமைப்பை வீணடித்து பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்ரோவ்ஸ்கில் உள்ள நீர் கட்டமைப்பு  சமீபத்திய சண்டையில் சேதமடைந்துள்ளதாகவும், 300 மேற்பட்ட கிணறுகள் தற்காலிகமாக தோண்டப்பட்டுள்ளதாக பிராந்திய கவர்னர் வாடிம் பிலாஷ்கின் கூறினார்.

முந்தைய நாள், ரஷ்யர்கள் போக்ரோவ்ஸ்க் அருகே இயற்கை எரிவாயு விநியோக நிலையத்தை அழித்த நிலையில், இதனைத் தொடர்ந்து நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Exit mobile version