Site icon Tamil News

டிரம்ப் உட்பட 18 பேருக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் அதிபர் டிரம்ப் உள்ளிட்டோருக்கு பிடிவாரண்ட் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020இல் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்பை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பைடன் தோற்கடித்தார்.

இருப்பினும், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தனக்கு எதிராக மிகப் பெரிய முறைகேடு நடந்ததாக தொடர்ந்து ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டினார்..

இதன்போது வன்முறையாளர்கள் சிலர் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்ததில் ஏற்பட்ட வன்முறையில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இது அமெரிக்க வரலாற்றில் கறுப்பு நாளாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிராகப் பிடி வாரண்ட பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவருடன் சேர்த்து 18 பேருக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜார்ஜியா நீதிபதி தெரிவித்துள்ளார்.

அவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் தானாக வந்து சரணடைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version