Site icon Tamil News

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை – உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்

இலங்கையர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு இதனை வலியுறுத்துகின்றார்.

தற்போது காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கூடிய பல நோய்கள் பரவி வருவதால், 02 நாட்களுக்குப் பின்னரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரின் உயிருக்கு தாமதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சில நோயாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக வைத்தியரைப் பார்க்காமல், தமது சொந்த அல்லது தமது குடும்ப உறுப்பினர்களின் கருத்திற்கு அமைய இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதைப் புறக்கணிப்பதாக சுட்டிக்காட்டும் வைத்தியர், மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றார்.

Exit mobile version