Site icon Tamil News

வாக்னர் குழுவை அணுகியது பெலாரஷ்ய இராணுவம்

வெளிநாட்டு ஊடகங்களின்படி, ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கியதன் காரணமாக ரஷ்யாவை விட்டு வெளியேறிய வாக்னர் கூலிப்படையினருக்கு பெலாரஸ் மாநிலம் அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, பெலாரஸ் இராணுவத்துக்கு இராணுவ பயிற்சி அளிக்க வாக்னர் இராணுவத்தை அழைத்துள்ளார்.

பெலாரஸ் சுதந்திர தினத்தை முன்னிட்டு கருத்து வெளியிடும் போதே பெலாரஸ் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

வாக்னர் கூலிப்படை மீது தனக்கு எந்த பயமும் இல்லை என்றும் அவர்களை நீண்ட நாட்களாக தெரியும் என்றும் கூறியுள்ளார்.

எனினும் ரஷ்யாவில் இருந்து வந்த வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் தற்போது பெலாரஸ் நாட்டில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாக்னரின் இராணுவ உறுப்பினர்கள் சிலர் உக்ரைனில் உள்ள அவர்களது முகாம்களில் இருப்பதாகவும், மற்றவர்கள் பெலாரஸ் மாநிலத்தில் முகாம்களை கட்டி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version