Site icon Tamil News

உலகை அச்சுறுத்தும் பாதிப்பு – வழக்கத்திற்கு மாறான மாற்றங்களால் நெருக்கடியில் மக்கள்

உலகளவில் வெப்பம் ஜூன் மாதம் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

எல் நினோ காலக் கட்டம் தொடர்வதால் 2023-ம் வருடத்தை விட 2024-ம் வருடம் மிக வெப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

காப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின் (C3S) துணை இயக்குனர் சமந்தா பர்கெஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய காலநிலை எவ்வளவு வெப்பமாக இருக்கிறதோ, சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றங்களும் நிகழ்வுகளும், தீவிரத்திலிருந்து மேலும் தீவிரமாக மாறலாம். புவி வெப்பமடைதலின் அளவிற்கும், தொடர் மற்றும் தீவிர நிகழ்வுகளுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வருடத்தின் ஜூன் மாத முதல் சில நாட்களிலேயே, உலகளாவிய சராசரி வெப்பநிலையானது, இதுவரை பதிவான ERA5 தரவுப் பதிவுகளின்படி, கணிசமான அளவு வித்தியாசத்தில் அதிகமாக இருந்தது ஐரோப்பாவின் காப்பர்நிகஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

தரவுகளின்படி, தினசரி உலகளாவிய சராசரி வெப்பநிலை, ஜூன் 7-லிருந்து ஜூன் 11-க்கு இடைபட்ட காலத்தில் 1.5 செல்சியஸ் வரம்பின் அருகாமையிலோ அதற்கு மேலோ இருந்துள்ளது. மேலும், ஜூன் 9 அன்று அதிகபட்சமாக 1.69 செல்சியஸை தொட்டது. இந்த ஆண்டு ஜூன் 8 மற்றும் 9-ம் திகதிக்ளுள் உலகளாவிய சராசரி தினசரி வெப்பநிலை, அதே நாட்களில் முந்தைய பதிவுகளை விட 0.4 செல்சியஸ் வெப்பமாக இருந்தது.

உலகம் ஒரு பருவநிலை மாற்ற பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றாலும் அதற்கு உலக நாடுகள் ஆற்ற வேண்டிய எதிர்வினை போதுமானதாக இல்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நூற்றாண்டின் இறுதியில் வெப்பநிலை, தற்போதிருக்கும் காலநிலைக் கொள்கைகளால், ஐ.நா.வின் இலக்கான 1.5 டிகிரி செல்சியஸை விட இரண்டு மடங்கு அதிகமாகலாம்.

Exit mobile version