Site icon Tamil News

பாரிய அளவிலானவர்களை பணிநீக்கம் செய்ய தயாராகும் வோடஃபோன் நிறுவனம் : பாதிக்கப்படபோகும் பிரித்தானியர்கள்!

வோடஃபோன் நிறுவனமானது, நிதி செயல்திறனை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி, தொலைத்தொடர்பு நிறுவனம் போட்டியற்றதாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வோடஃபோன் நிறுவனத்தில் உலகெங்கிலும், மொத்தமாக ஒரு இலட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றார்கள். அவர்களில் 9 ஆயிரம் பேர் பிரித்தானியாவை சேர்ந்தவர்களாவர்.

நிறுவனத்தின் குறித்த நடவடிக்கையால் எத்தனை பிரித்தானியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.  ஆனால் பெர்க்ஷயரில் உள்ள அதன் தலைமையகம் பாதிப்பைக் காணும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் நிக் ரீட் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த மாதம் நிரந்தர அதிகாரியாக Margherita Della Valle நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற Margherita  “எங்கள் செயல்திறன் போதுமானதாக இல்லை எனத் தெரிவித்தார்.

அதேநேரம் நாங்கள் எங்கள் நிறுவனத்தை மீட்டெடுக்க போட்டித்தன்மையை மீண்டும் பெற சிக்கலான தன்மையைக் குறைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

வோடஃபோன் முழு ஆண்டு வருமானத்தில் 1.3% சரிவை 12.8 பில்லியன் பவுண்டுகளாகக் குறைத்துள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version