Tamil News

மோடிக்கு வாழ்த்து கூறினார் விஜய்.. ஆனா ஸ்டாலினுக்கு இதுவரை வாழ்த்து சொல்ல இல்லையே…

பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, என்டிஏ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. பிரதமர் மோடி இன்று மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார்.

மூன்றாவது முறையாகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வெற்றி கழக விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதேநேரம் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றதற்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை என்று நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

Exit mobile version