Tamil News

‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை… ஷாக்கான ரசிகர்கள்!

இன்று நடைபெற உள்ள ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றிவிழாவில், ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என வெளியாகியுள்ள தகவல் விஜய் ரசிகர்களை உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தளபதி நடிப்பில், அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்த லியோ திரைப்படம் 12 நாட்களில் 540 கோடி வசூலை வாரி குவித்துள்ளதை தொடர்ந்து, இப்படத்தின் வெற்றியை கொண்டாட தயாராகியுள்ளது படக்குழு. அதன்படி, இந்த படத்தின், சக்ஸஸ் மீட் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

லியோ படத்தின் ரிலீசுக்கு முன்னர், ஏற்பாடு செய்யப்பட்ட ஆடியோ லான்ச் நடத்தப்படாமல் போனதால், ‘லியோ’ படத்தின் சக்ஸஸ் மீட்டில் எப்படியும் தளபதியை பார்த்து விட வேண்டும் என வெறித்தனமாக கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள்.

மேலும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தளபதி உட்பட இப்படத்தில் நடித்த பல பிரபலங்கள், மற்றும் இப்படத்தில் நடித்திராத சில பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என கூறப்படுவதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்கு 200 முதல் 300 கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், ரசிகர்கள் பேருந்தில் வர அனுமதியில்லை எனவும் காவல்துறை தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதே போல் லியோ சக்சஸ் மீட்டுக்கு வருபவர் வெறும் எண்ட்ரி பாஸ் மட்டும் கொண்டு வந்தால் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்களாம் என்றும் அவர்கள் கையில் தங்களது ஆதார் அட்டையையும் அவசியம் எடுத்து வந்தால் மட்டுமே நேரு உள்விளையாட்டு அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என புது ரூல் ஒன்றை நடைமுறை படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதுமட்டும் இன்றி நாளை நடைபெறும் லியோ வெற்றிவிழாவில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நேரு ஸ்டேடியத்திற்கு வரும்போது உறுப்பினர் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் சரி பார்க்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் லியோ படத்தின் வெற்றிவிழாவில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, ஆகிய மாநிலங்களை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. ஆனால் இப்படி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்து வருவதால், இதுகுறித்து… அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் போதே, உண்மை தகவல் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version