Site icon Tamil News

சமந்தாவிற்கு தெரியாமல் விஜய் தேவரகொண்டா எடுத்த வீடியோ வெளியானது…

சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் ‘குஷி’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

இப்படம் வருகிற செப்டம்பர் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இப்படத்தின் முதல் பாடலான ‘என் ரோஜா நீயே’ பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்பாடலின் படப்பிடிப்பின் போது சமந்தாவிற்கு தெரியாமல் விஜய் தேவரகொண்டா வீடியோ எடுத்துள்ளார்.

இதனை அவர் ஒரு தொகுப்பாக தயார் செய்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் இடையேயான அன்பும் நட்பும் அழகாக வெளிபடுவதாக ரசிகர்கள் சிலர் கமெண்டுகளில் தெரிவித்துள்ளன.

Exit mobile version