Site icon Tamil News

”ஜவான்“ லேட்டஸ்ட் அப்டேட்! தமிழில் பாடியுள்ள ஷாருக்கான்??

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜவான். ஷாருக்கான் நடித்து திரைக்கு வந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பதான் படத்தை அடுத்து வெளியாகும் படம் என்பதால் இந்த ஜவான் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படம் செப்டம்பர் 7ஆம் திகதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா குறித்து ஷாருக்கான் கூறுகையில்,

நயன்தாரா மிகவும் அழகானவர் இனிமையானவர். அவருடன் பணியாற்றியது சவுகரியமாக இருந்தது. அதேபோல் விஜய் சேதுபதி அடக்கமான மனிதர், சிறந்த நடிகர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ள ஷாருக்கான், இந்த படத்தில் அட்லியும், அனிருத்தும் தன்னை தமிழில் சில பாடல் வரிகளை பாட வைத்திருப்பதாகவும், அந்த வரிகளை சரியாக உச்சரித்திருப்பதாக நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்த ஜவான் படத்தில் ஷாருக்கான் தமிழில் பின்னணி பாடியிருப்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version