Tamil News

விஜய் – ரம்பா திடீர் சந்திப்பு – வைரலாகும் புகைப்படம்

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் தன் கடைசி திரைப்படமான தளபதி 69 பட வேலைகளை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை துவங்கிய விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலக இருப்பதாக தெரிவித்தார்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தற்போது தளபதி விஜய்யை பிரபல நாயகியான ரம்பா தன் குடும்பத்துடன் நேரில் சந்தித்துள்ளார்.

90 களில் கொடிகட்டி பறந்த நாயகிகளில் ஒருவர் தான் ரம்பா. விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய் படத்திலும் ரம்பா நடித்திருந்தார். அதன் பிறகு திருமணம் ஆன பின்பு நடிப்பில் இருந்து விலகிய ரம்பா அவ்வப்போது தன் புகைப்படங்களையும் தன் குடும்பத்தை சார்ந்தவர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் விஜய்யை நேரில் சந்தித்து இருக்கின்றார் ரம்பா. அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    

Exit mobile version