Tamil News

மகனுடன் கொஞ்சி விளையாடும் நயன்… போட்டோ வெளியிட்டார் சிவன்

தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. தன் நடிப்பு திறமையால் படிப்படியாக முன்னேறி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்.

விக்கேனஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா தங்கள் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை தூக்கிக் கொஞ்சும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு “என் உயிர்கள்… என் அன்பானவர்களுடன் ஞாயிறு சிறப்பாக போனது. எளிமையான தருணங்கள்” என மகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

Exit mobile version