Tamil News

சன்னி லியோனுக்கு பால்கோவா… “நயன்தாரா தான் அடுத்த டார்கெட்” ஜி.பி.முத்து பேட்டி

டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

சினிமாவில் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் ஜிபி முத்து நயன்தாரா கூட நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையை சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

டிக் டாக்கில் தனக்கு வரும் கடிதங்களை பிரித்துப் படிக்கிறேன் என காமெடி செய்தே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜிபி முத்து.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில், அங்கேயும் ஒரு தபால் பெட்டி இவருக்காக வைக்கப்பட்டு ரசிகர்களின் கடிதங்களை வாசிக்கும் காட்சிகளும் இடம்பெற்றன.

பிக் பாஸுக்கு பிறகு நடிகராக வலம் வரும் ஜிபி முத்துவுக்கு இப்பவும் தினமும் 6000 கடிதங்களுக்கு மேலாக வருகிறது என இந்த பேட்டியில் ஜிபி முத்து கூறியுள்ளார்.

அஜித்தின் துணிவு, சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஜிபி முத்து ஓ மை கோஸ்ட் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்த சன்னி லியோனுக்கு மேடையேறி பால்கோவா ஊட்டி விட்ட காட்சிகள் ஏகப்பட்ட ரசிகர்களை பொறாமை கொள்ளச் செய்தன.

சன்னி லியோன் படத்தைத் தொடர்ந்து தற்போது ஷிவானி நாராயணன் நடித்து வரும் பம்பர் படத்தில் காமெடியனாக நடித்துள்ள ஜிபி முத்துவுக்கு அடுத்து எந்த நடிகையுடன் ஆசை இருக்கு என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டது.

அந்த கேள்விக்கு சட்டுன்னு பதில் அளிக்காமல் தயங்கிய ஜிபி முத்து மீண்டும் இதே டீமில் நடிக்க வேண்டும் என்றும் அனைவருடனும் நடிக்க வேண்டும் என்று மழுப்பி வந்தார். உடனே பம்பர் படத்தின் ஹீரோ வெற்றி, அவருக்கு ஆசை இருக்கு சொல்வாரு என உசுப்பி விட, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் நடிக்கணும் என்கிற தனது ஆசையை சொல்லி உள்ளார் ஜிபி முத்து.

Exit mobile version