Tamil News

விடுதலை 2 – First லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் விடுதலை முதல் பாகம். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மேலும் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்து சூரியின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

விடுதலை 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கூடுதலாக இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், விடுதலை 2 படத்தின் First லுக் போஸ்டர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, First லுக் போஸ்டர் அடுத்த வாரம் வெளிவரவுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் சக்தி கூறியுள்ளார்.

ஆனால், இந்த First லுக் போஸ்டர் குறித்து விடுதலை படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version