Tamil News

விஜயை பார்க்க முடியாமல் அழுத மாணவர்கள்!! தரமான செயல்…

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்களை பிடித்த சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

actorzone: vijay new stills

நிகழ்ச்சி நடந்த இடம் அரசியல் காட்சி மாநாடு நடைபெறும் இடம் போல மேடை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாற்றுதிறனாளி மாணவர்களுடன் அமர்ந்து நிகழ்ச்சியை தொடங்கினார் விஜய்.

காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய விஜய், முடிந்தவரை நன்றாக படியுங்கள், அனைத்து தலைவர்களையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள், தேவை இல்லாத விஷயங்களை விட்டு விடுங்கள் என்றார்.

மேலும், உன் நண்பரைப் பற்றிச் சொல்லு, உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்று நிறையப் பேர் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எனக்குத் தெரிந்து இன்று இதெல்லாம் மாறிவிட்டது.

நீ எந்த சோஷியல் மீடியா பக்கத்தை ஃபாலோ செய்கிறாய் என்று சொல்லு, நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பதுதான் இன்றைய பழமொழியாக மாறி இருக்கிறது.

மாணவர்களாகி உங்களை திசை திருப்ப ஒரு கூட்டமே இருக்கிறது என்று மாணவர்களுக்கு ஒரு சில அறிவுரைகளை கூறினார்.

இவ்வாறு ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போது தனது தொகுதியில் 597 மதிப்பெண் பெற்ற மாணவி நான் தான் எனது தொகுதியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவி நான் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தேன்.

ஆனால் என்னை விழாவிற்கு கூப்பிடவில்லை. விழாவில் கலந்து கொண்டு இருக்கும் மாணவி பிரெஞ்சை எடுத்து படித்த மாணவி என்று கதறி அழுதபடி பேசினார்.

இதையடுத்து, அங்கு இருந்தவர்கள் பள்ளியில் லிஸ்ட் கேட்டுத்தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது என்றும், இப்போது நிகழ்ச்சி நடந்து கொண்டு இருப்பதால் எதுவும் எங்களால் செய்ய முடியாது இரண்டு நாட்கள் கழித்து அலுவலகத்திற்கு வருமாறு ஆறுதல் கூறி அந்த மாணவியை அனுப்பி வைத்தனர்.

விஜய்யை பார்க்க முடியாத விரக்தியில் அந்த மாணவி அங்கிருந்து அழுதபடியே சென்றார்.

இது இப்படி இருக்க விழாவில், பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு தளபதி விஜய் வைர நெக்லசை பரிசாக கொடுத்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் 557 மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி விஜய் அண்ணாவை பார்த்ததும் நான் அழுதேவிட்டேன், அவர் என் அருகில் அமர்ந்து இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றார்.

மேலும்,மாணவியின் அம்மா, என் மகள் 6 மாத குழந்தையாக இருக்கும் போதே இந்த நோயால் பாதிக்கப்பட்டல், அவள் இரவு பகல் பார்க்காமல் படித்து இந்த மதிப்பெண் எடுத்து இருக்கிறார்.

கோவை வரை தெரிந்த என் மகளின் பெருமை இன்று விஜய்யால் உலகம் முழுவதும் தெரிகிறது என்றால் அதற்கு காரணம் விஜய்தான் என்று நெகிழ்ந்து பேசினார்.

இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த மாணவர்களுக்கு மதிய உணவாக ஜம்ஜம் சுவீட், மாங்காய் ஊறுகாய், இஞ்சி புளி துவையல் புதினா, ஆனியன் வெள்ளேரி தயிர்பச்சடி, கதம்ப பருப்பு பொரியல், உருளை பட்டாணி வருவல், சவ்சவ் கூட்டு, காளிஃபிளவர் பகோடா, வெஜ்புலவு, கத்திரிக்காய் காரகுழம்பு, மாங்காய், முருங்கை கதம்ப சாம்பார், தக்காளி ரசம், ஆனியன் வடை, அப்பளம், அடபிரதம பாயாசம், மோர் உள்ளிட்ட உணவு பறிமாறப்பட்டது.

விஜயின் பேச்சு வரவேற்புக்குரியது என்று இயக்குநர் கரு பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி விஜய்யை மனதார பாராட்டி உள்ளார்.

தாடி பாலாஜியைப் போல மற்ற நடிகர்களும் நடிகர் விஜயை பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version