Site icon Tamil News

ஹமாஸ் பிடியிலிருந்த பிரெஞ்சு இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தது கால்நடை மருத்துவர்!

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த 260 பேரை சுட்டுக்கொன்றதுடன், 240 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

கத்தார் முதலான சில நாடுகளில் தலையீட்டைத் தொடர்ந்து தற்போது பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டவர்களில் மியா (21) என்னும் இளம்பெண்ணும் ஒருவர்.

மியாவை ஹமாஸ் குழுவினர் பிடித்துச் செல்லும்போது அவர் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தார். அவரது வலது கையில் குண்டு பாய்ந்திருந்தது.

நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டபோதும் மியா கையில் கட்டுடனேயே காணப்பட்டார். இந்நிலையில், மியா ஹமாஸிடம் பிணைக்கைதியாக இருக்கும்போது, ஹமாஸ் குழுவினர் தனக்கு சிகிச்சையளித்து தன்னை நன்றாக கவனித்துக்கொள்வதாக வீடியோ ஒன்றில் கூறியிருந்தார்.

ஆனால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்தது, மனிதர்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் அல்ல, கால்நடைகளுக்கு வைத்தியம் பார்க்கும் கால்நடை மருத்துவர் என அவரது உறவினர்கள் தற்போது தெரிவித்துள்ளார்கள்.மியா இஸ்ரேல் பிரெஞ்சுக் குடிமகள் என்பதும், அவர் விடுவிக்கப்பட்ட செய்தி அறிந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மகிழ்ச்சி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version