Tamil News

இந்தியன் 2-வுக்கு போட்டியாக களமிறங்கும் வணங்கான்…

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் பாலா. இவர் சூர்யாவை வைத்து வணங்கான் என்கிற படத்தை இயக்க உள்ளதாக கடந்த 2021-ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது.

அப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு, அதன் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்றது.

கன்னியாகுமரியில் சுமார் ஒருமாத காலம் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், சூர்யாவுக்கு பாலாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்தன.

அந்த சம்பவத்துக்கு பின்னர் மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. இதையடுத்து வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகவும், அவருக்கு பதில் வேறு ஒரு ஹீரோவை வைத்து அப்படத்தை எடுக்க உள்ளதாகவும் பாலா அறிவித்தார்.

அதன்பின்னர் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் அப்படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனார். கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த வணங்கான் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.

தற்போது வணங்கான் படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதன் ரிலீஸ் குறித்த அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி வணங்கான் திரைப்படம் வருகிற ஜூலை மாதம் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே ஜூலை மாத ரேஸில் தனுஷின் ராயன் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்கள் உள்ளதால் வணங்கான் படமும் அதற்கு போட்டியாக களமிறங்கி உள்ளது. இதில் எந்த படத்துக்கு போட்டியாக வணங்கான் ரிலீஸ் ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Exit mobile version