Site icon Tamil News

அமெரிக்கா – ஜார்ஜியாவில் வணிகவளாகத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் – மூவர் பலி!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் தென்மேற்கே இவான்ஸ் தெருவில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியருகே 3 பேர் வந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து மற்ற 2 பேரை நோக்கி சுட்டுள்ளார்.இதனால் அவர்கள் இருவரில் ஒருவரும் கைத்துப்பாக்கியை எடுத்து பதிலுக்கு சுட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனை பார்த்த அந்த தெருவில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பொலிஸார் உடனடியாக சென்று விசாரணையில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஒருவருக்கு 20 வயதும், மற்றொருவருக்கு 30 வயதும் ஆகும். எனினும், அவர்களை பற்றிய அடையாளங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

Exit mobile version