Site icon Tamil News

அணு ஆயுதம் குறித்த தரவுகளை ரஷ்யாவுக்கு பரிமாற போவதில்லை – அமெரிக்கா திட்டவட்டம்

அணு ஆயுதங்களை குறைப்பதற்காக ‘நியூ ஸ்டார்ட்’ New START அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் அமெரிக்கா- ரஷ்யா இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதம் எங்கு உள்ளது, எங்கிருந்து ஏவப்படுகிறது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போன்ற தரவுகளை பகிர்வது உள்ளிட்டவை ஆகும்.

இதன்படி இரு நாடுகளும் தங்களுக்குள் அணு ஆயுதங்கள் குறித்த தரவுகளை பகிர்ந்து கொண்டிருந்தன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து அமெரிக்கா- ரஷ்யா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. பல்வேறு நாடுகளை ஒன்றிணைத்து ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததோடு, உக்ரைனுக்கு ராணுவ உதவிகளையும் அமெரிக்கா வழங்கியது.

இதனால் ‘நியூ ஸ்டார்ட்’ ஒப்பந்தத்தை ரஷ்யா இடைநிறுத்தியது. இதன்மூலம் ரஷ்யா அணு ஆயுத தரவுகளை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டியதில்லை எனக் தெரிவித்தது. இந்த நிலையில், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் வகையில் தாங்களும் அணு ஆயுதம் குறித்த தரவுகளை ரஷ்யாவுக்கு கொடுப்பதில்லை என முடிவு செய்துள்ளது. இதனை அமெரிக்க வெளியுறவுத்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Exit mobile version