Site icon Tamil News

உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க அமெரிக்க அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் : டேவிட் கேமரூன் வலியுறுத்தல்!

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் முன்னெடுத்துவரும் போருக்கு, அமெரிக்கா நிதியுதவி வழங்க சட்டமியற்றும் அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கேமரூன், வெளியுறவு செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பிறகு, வாஷிங்டனுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது அங்குள்ள ஆஸ்பென் பாதுகாப்பு மன்றத்தில் பேசுகையில் மேற்படி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நாங்கள் அவர்களுக்கு ஆயுதங்கள், பொருளாதார ஆதரவு, தார்மீக ஆதரவு, இராஜதந்திர ஆதரவு ஆகியவற்றை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“உக்ரேனிய மக்களின் வலிமை மற்றும் ஒற்றுமை, ஒருமித்த கருத்து மற்றும் துணிச்சலைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்றும், நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யப் போவதில்லை என்றுதான்  நான் கவலைப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா போரில் உக்ரைனுக்கு போதுமான நிதியுதவியை வழங்காவிட்டால், இந்த போரில் ரஷ்யா வெற்றிப்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், டேவிட் கேமரூனின் கருத்துக்கள் வந்துள்ளன.

Exit mobile version