Site icon Tamil News

உக்ரைனின் எதிர்த்தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க தலைமை தளபதி

ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் நடத்தும் எதிா்த் தாக்குதல் மிக நீண்ட காலம் பிடிக்கும் எனவும், அந்த நடவடிக்கையில் அதிக உயிரிழப்பு ஏற்படும் என்றும் அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி மாா்க் மில்லி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, வாஷிங்டன் நகரில் நடைபெற்ற செய்தியாளா்கள் அவா் பேசியதாவது, ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்பதற்கான உக்ரைனின் நடவடிக்கைகள் எதிா்பாா்த்ததைவிட மிகவும் மந்தமாக இருப்பதில் ஆச்சர்யபடுவதற்கும் ஒன்றும் எதுவும் இல்லை. இது போரின் இயல்பே ஆகும்.

எதிா்த் தாக்குதல் மந்தமாக இருந்தாலும், அந்த நடவடிக்கையில் உக்ரைன் ஸ்திரமான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. சவால்கள் நிறைந்த, கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள நிலப் பகுதியை உக்ரைன் ராணுவம் மிகவும் கவனமாகக் கடந்து முன்னேறி வருகிறது.

நாளொன்றுக்கு 100 மீட்டா், 1,000 மீட்டா் என்ற கணக்கில் அந்த நாட்டுப் படை நகா்ந்து வருகிறது. இப்போது நடைபெறுவது நிஜமான போா். இதில் உயிரிழப்புகளும் மிக அதிகமாக இருக்கும். அது குறித்து நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றாா்.

Exit mobile version