Site icon Tamil News

உக்ரைன் போரில் திடீர் திருப்பம் – அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார்: புட்டின் அறிவிப்பு

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்குவதை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டுமென என புட்டின் நிபந்தனை விதித்துள்ளார்.

மொஸ்கோவில் இராணுவம் தொடர்பான இணையதள பிளாக்கர்களுடன் உரையாடிய அவர், ரஷ்ய ஆயுதங்களின் தரம் தற்போது மேம்பட்டுள்ளது.

அதேநேரத்தில் டிரோன் மற்றும் துல்லிய தாக்குதல் தொடர்பான ஆயுத தயாரிப்பில் பின்தங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அமெரிக்கா வழங்கிய ஹிம்மர் ராக்கெட்டுகள் மூலம் ககோவ்கா அணையை உக்ரைன் தகர்த்துள்ளதாக குற்றம்சாட்டிய புட்டின், எதிர்த்தாக்குதலை தீவிரப்படுத்தியபிறகு ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் உக்ரைனுக்கு 10 மடங்கு உயிரிழப்பு அதிகம் என்றும் கூறினார்.

Exit mobile version