Site icon Tamil News

அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத வித்தியாசமான வானிலை

அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வழக்கத்துக்கு மாறாகச் சற்று வெப்பமான குளிர்காலம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பருவநிலை நெருக்கடி தீவிரமடைவதன் அறிகுறியாக அது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் 48 மாநிலங்களில் கடந்த மூன்று மாதங்களுக்கான சராசரி வெப்பநிலை 3.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.

இதற்கு El nino பருவநிலையும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. உலக அளவில் சென்ற மாதம் ஆக வெப்பமான பிப்ரவரி மாதமாகப் பதிவு செய்யப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வருடாந்திர நாட்டு நடப்பு உரையின்போது உலக வெப்பமயமாதலைப் ‘பருவநிலை நெருக்கடி’ என்று வருணித்திருந்தார். ஏற்கெனவே இது ‘பருவநிலை மாற்றம்’ என்று அழைக்கப்பட்டது.

உலகில் ஆக அதிக அளவில் வெப்ப வாயுக்களை வெளியேற்றும் நாடுகளின் வரிசையில் சீனாவுக்கு அடுத்த நிலையில் அமெரிக்கா உள்ளது.

Exit mobile version