Site icon Tamil News

ஐ.நா வாக்கெடுப்பு : அமெரிக்கா இஸ்ரேல் இடையே தீவிரமடையும் முறுகல்

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையிலான உறவுகள் இடையே முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது.

காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுக்காமை குறித்து இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புச் சபையிலுள்ள ஏனைய 14 நாடுகளும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

கடந்த ஒக்டோபரில் காஸா யுத்தம் ஆரம்பமான பின்னர் காஸாவில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

ஹமாஸ் வசமுள்ள பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டுமெனவும் ஐ.நா. பாதுகாப்புச் சபை கோரியுள்ளது.

பாதுகாப்புச் சபையின் இத்தீர்மானத்தை ஹமாஸ் வரவேற்றுள்ளது. பலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு தான் தயார் எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

பணயக் கைதிகளை விடுவிக்காமலேயே சர்வதேச அழுத்தத்தின் மூலம் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஹமாஸுக்கு இத்தீர்மானம் அளிக்கும் என இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாஹு கூறியுள்ளார்.

Exit mobile version