Tamil News

தீவிரமடையும் உக்ரைன் போர்! ரஷ்யாவிற்குள் இருந்து ரஷ்யா எதிர்கொண்ட மோசமான தாக்குதல்?

ரஷ்யாவின் பிஸ்கோவ் நகரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது செவ்வாய்கிழமை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது,

ரஷ்யாவிற்குள் இருந்து நடத்தப்பட்டதாக உக்ரைனின் ராணுவ உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை உக்ரைன் அல்லது ரஷ்ய அதிரடிப்படையினர் நடத்தியதா என்பதை புடானோவ் கூறவில்லை.

ரஷ்யா மீது உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் கிட்டத்தட்ட தினசரி நிகழ்கின்றன. பிஸ்கோவ் தாக்குதலை ஏற்கனவே ஒப்புக்கொண்டது.

ஆனால் புடானோவின் கருத்துக்கள் இது ஒரு நீண்ட தூர ஆயுதத்தால் ஏற்பட்டது என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உள்ளது.

வியாழன் அன்று ஜனாதிபதி Volodymyr Zelensky உக்ரைனில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கியதாக கூறினார்பிஸ்கோவ் உக்ரேனிய எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 700km (434 மைல்) தொலைவில் உள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் GUR இராணுவ புலனாய்வு தலைவரான Kyrylo Budanov, ட்ரோன்கள் தாக்குதல் ரஷ்யாவின் எல்லையில் இருந்து நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

அவர் இதுகுறித்து வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘Pskovயில் உள்ள Kresty விமான தளத்தை தாக்க பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டன. இத்தாக்குதலின் விளைவாக நான்கு ரஷ்ய IL-76 இராணுவ போக்குவரத்து விமானங்கள் தாக்கப்பட்டன. இரண்டு அழிக்கப்பட்டன மற்றும் இரண்டு கடுமையாக சேதமடைந்தன’ என தெரிவித்துள்ளார்.

ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் துருப்புகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்ல சேதமடைந்த விமானத்தை பயன்படுத்தியதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

மே மாத இறுதியில் ட்ரோன்களால் குறிவைக்கப்பட்ட Pskov பகுதி, அதன் மேற்கில் நேட்டோ உறுப்பினர்களான எஸ்டோனியா மற்றும் லாட்வியா, தெற்கில் பெலாரஸ் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version