Site icon Tamil News

தன் பதவியை ராஜினாமா செய்துள்ள பிரிட்டன் அமைச்சர்

பிரிட்டனின் சர்வதேச சுற்றாடல் அமைச்சர் ஸாக் கோல்ட்ஸ்மித் இன்று இராஜினாமா செய்துள்ளதுடன் பிரதமர் ரிஸி சுனக்கை கடுமையாக சடியுள்ளார்.

2022 செப்டெம்பரில் அப்போதைய பிரதமர் லிஸ் ட்ரஸினால், சர்வதேச சுற்றாடல் அமைச்சராக ஸாக் கோல்ட்ஸ்மித் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பிரதமர் ரிஷி சுனாக்கும் கோல்ட்ஸ்மித்துக்கு அதே பதவியை வழங்கினார்.

இந்நிலையில், அப்பதவியிலிருந்து இன்று இராஜினாமா செய்த கோல்ட்ஸ்மித், பிரதமர் ரிஷி சுனாக்கை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜோன்சனின் காலத்தில், காலநிலை மாற்றம், சுற்றாடல் பாதுகாப்பு, மிருக நலன்புரி விடயங்களில் பிரிட்டன் ஒரு தலைமையாக இருந்தது.ஆனால், இன்று படிப்படியாக இந்த அர்ப்பணிப்புகளை பிரிட்டன் கைவிட்டுள்ளது என தனது ராஜினாமா கடிதத்தில் கோல்ட்ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு கடந்த வாரம் பாரிஸ் நகரில் நடந்த காலநிலை மாநாட்டில் கலந்துகொள்ளாமல், ஊடகத்துறை தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக்கின் வருடாந்த விருந்து நிகழ்வில் ரிஷி சுனாக் கலந்துகொண்டார் எனவும் ஸாக் கோல்ட்ஸ்மித் விசனம் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version