Site icon Tamil News

இங்கிலாந்தின் பிரதி பிரதமர் டொமினிக் ராப் பதவி விலகினார்!

பிரிட்டனின் பிரதி பிரதமர் டொமினிக் ராப்  பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொமினிக் ராப் துன்புறுத்தல்கள் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டார் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து இடம்பெற்ற விசாரணைகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அடம்டொலி மேற்கொண்ட விசாரணை அறிக்கையை தொடர்ந்து நான் பதவி விலகுகின்றேன் என தெரிவித்துள்ள அவர் நானே விசாரணைகளிற்கு அழைப்பு விடுத்தேன் விசாரணை முடிவுகளை அடிப்படையாக வைத்து இராஜினாமா செய்ய தயார் என அறிவித்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் எனது வார்த்தைகளை காப்பாற்ற விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொமினின் ராப் தனது அனைத்து திணைக்களங்களிலும் அச்ச கலாச்சாரத்தை உருவாக்கினார் என அவரின் பணியாளர் ஒருவர் நவம்பரில் குற்றம்சாட்டியிருந்தார்.

அந்த குற்றச்சாட்டை நிராகரித்து டொமினிக் ரப் இந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை கோரியிருந்தார்.

Exit mobile version