Site icon Tamil News

ஜேர்மனில் இரு தசாப்தங்களாக தலைமறைவாகி இருந்த இருவர் கைது!

ஜேர்மன் புலனாய்வாளர்கள் இரண்டு தசாப்தங்களாக தலைமறைவாகி இருந்த இருவரை இன்று (27.03) கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் செம்படைப்பிரிவின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த பெப்ரவரி மாதம் இடதுசாரி செம்படை பிரிவில் பணியாற்றியவர் என  சந்தேகிக்கப்படும் 65 வயதான Daniela Klette என்பவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

செம்படை பிரிவு கலைக்கப்பட்ட பின்னர், 1999 மற்றும் 2016 க்கு இடையில் தொடர்ச்சியான கொள்ளைகளில் பங்கேற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வியட்நாம் போருக்கு எதிரான ஜேர்மன் மாணவர் போராட்டங்களில் இருந்து தோன்றிய செம்படைப் பிரிவு, 34 பேரைக் கொன்றது மற்றும் நூற்றுக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த படை  1998 இல் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version