Site icon Tamil News

‘ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு’ கடும் கண்டனம் தெரிவித்த ஜெலன்ஸ்கி

ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு என்று விமர்சித்து தனது கடும் கண்டனத்தை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் உக்ரைனின் மத்திய நகரமான டினிப்ரோவில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்தமை தொடர்பில் தனது டெலிகிராம் பதிவில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.மேலும், டினிப்ரோ நகரின் பிராந்திய ஆளுநர் Serhiy Lysak தாக்குதலைத் தொடர்ந்து நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்ட போது, “3 குழந்தைகள் கவலைக்கிடமாக காணப்படுகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் ரஷ்ய இராணுவத்தால் நடத்தப்பட்டது என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.இருப்பினும், ரஷ்ய இராணுவ அதிகாரிகளிடம் இருந்து ஏவுகணை தாக்குதல் தொடர்பில் எந்த கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.

இந்த தாக்குதல் தொடர்பில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, தனது டெலிகிராம் பதிவில், “இரண்டு குடியிருப்பு கட்டிடங்களுக்கு இடையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.உக்ரைன் இராணுவப் படைகள் பொதுமக்களை குறிவைப்பதை தவிர்த்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version