Site icon Tamil News

இந்திய பாராளுமன்றத்தில் நுழைந்த இரு மர்மநபர்கள் : இந்தியாவில் பதற்றம்

இந்திய பாராளுமன்றத்தின் லோக்சபாவுக்கு இரண்டு இனந்தெரியாத நபர்கள் இன்று பிற்பகல் நுழைந்து எம்.பி.க்கள் மற்றும் சபாநாயகர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதன் காரணமாக லோக்சபா பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த இருவரையும் டெல்லி பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், தீவிர விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவரும், திடீரென நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து, சர்வாதிகாரம் ஒழிக என்று கோஷம் எழுப்பியதாகவும், வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகைக் குண்டுகளை அவர்கள் கையில் வைத்திருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தாக்குதல் தினத்தன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை, புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இவர்களது பின்புலம் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

 

 

Exit mobile version