Site icon Tamil News

பாரிய நஷ்டத்தில் தள்ளாடும் டுவிட்டர் நிறுவனம் – எலன் மஸ்க் புலம்பல்

சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக நிறுவனர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

நிறுவனர் எலன் மஸ்க் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளை குறிக்கும் ப்ளூ டிக்குக்கு சந்தா செலுத்துவதை கட்டாயமாக்கியுள்ளார். டுவிட்டர் லோகோவையும் மாற்றினார்.

டிவிட்டரில் பதிவிடும் கணக்குகள், டுவிட்டர் பக்கத்தை பயன்படுத்துவோர் ஒருநாளைக்கு எத்தனை பதிவுகளை படிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வௌியிட்டு வந்தார்.
எலன் மஸ்க்கின் அதிரடி உத்தரவுகளால் எரிச்சலடைந்த டுவிட்டர் பயனர்கள் அதனை விட்டு வௌியேறி வந்தனர்.

டுவிட்டரின் பங்குச்சந்தை மதிப்பும் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்தது. விளம்பரதாரர்களும் டிவிட்டரை விட்டு வௌியேறியதால் நஷ்டத்தை சந்தித்து வந்தது.

இதுகுறித்து எலன் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம், “வௌியேறிய விளம்பரதாரர்கள் மீண்டும் வருவார்கள். டுவிட்டர் மீண்டும் லாபத்தை நோக்கி செல்லும்” என்று தெரிவித்திருந்தார்.

Exit mobile version