Tamil News

70 வயதில் இரட்டை குழந்தை… செயற்கை கருவுறுதல் மூலம் உகாண்டா பெண் மருத்துவ சாதனை!

உகாண்டாவைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் செயற்கை கருவுறுதல் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்து மருத்துவமனையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பொதுவாக பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் நின்றுவிடும். அதனால் அதன்பின்னர் கருவுறுதலுக்கான வாய்ப்பு என்பது பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் மருத்துவத்துறையில் ஏற்பட்டிருக்கும் மகத்தான வளர்ச்சியால் 70 வயது மூதாட்டிக்கு குழந்தை பிறப்பு சாத்தியமாகியுள்ளது.

உகாண்டாவை சேர்ந்த 70 வயதான சஃபினா நமுக்வயா என்ற பெண் தனக்கு குழந்தை வேண்டும் என்று மருத்துவரை அணுகியபோது மருத்துவர் முதலில் மிகவும் யோசனை செய்திருக்கிறார். ஆனாலும் சஃபினா நமுக்வயா விடாப்பிடியாக மருத்துவரை தொல்லை கொடுத்ததனால் அவருக்கு கருவுறுதலுக்கான சாத்தியம் உள்ளதா என பரிசோதனைகளை செய்திருக்கிறார். அதில் நல்ல உடல் நலத்தோடு அவர் இருப்பது மருத்துவருக்கு தெரியவந்தது.

Motherhood Knows no Age: 70-Year-Old Ugandan Woman Delivers Twins Becoming  Oldest African Mother - 30.11.2023, Sputnik Africa

இதையடுத்து விந்து தானம் பெறப்பட்டு அவருக்கு செயற்கை கருவூட்டல் நடைபெற்றது. ஆச்சரியப்படும் வகையில் கரு வளர்ந்து அதுவும் இரட்டை கருவாக உருவெடுத்தது. மருத்துவமனையிலேயே தங்க வைத்து அவருக்கு முழுமையான உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன் விளைவாக ஒன்பதாம் மாத இறுதியில் சஃபினா நமுக்வயா இரட்டை குழந்தைகளை பெற்று எடுத்தார்.

இயல்பான சுகப்பிரசவம் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் அவருக்கு இரு தினங்களுக்கு முன்னர் சிசேரியன் செய்யப்பட்டது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். தாயும், சேய்களும் நலமாக உள்ளனர். இது மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

Exit mobile version