Site icon Tamil News

பாலஸ்தீனர்களுக்கு உதவ துருக்கியப் படைகள் இஸ்‌ரேலுக்குள் நுழையக்கூடும் ; அதிபர் ஏர்டோவான்

காஸா போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கு உதவ துருக்கியப் படைகள் இஸ்‌ரேலுக்குள் நுழையக்கூடும் என்று துருக்கிய அதிபர் ரிசெப் தயிப் எர்டோவான் ஜூலை 28ஆம் திகதியன்று தெரிவித்தார்.

ஆனால் இஸ்‌ரேலுக்குள் நுழைந்த பிறகு துருக்கியப் படைகள் எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளும் என்பது குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை.

போரால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ இதற்கு முன்பு லிபியா, நகார்னோ-கரபாக் ஆகியவற்றுக்குள் துருக்கியப் படைகள் நுழைந்தன.

காஸா மீது இஸ்‌ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு அதிபர் எர்டோவான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“துருக்கி வலிமையுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் இஸ்‌ரேலால் பாலஸ்தீனத்தில் இத்தகைய நியாயமற்ற செயல்களில் ஈடுபட முடியாது, லிபியா மற்றும் நகார்னோ-கரபாக்கில் நுழைந்தது போலவே இம்முறை இஸ்‌ரேலுக்குள் துருக்கியப் படைகள் நுழையக்கூடும்,” என்று அதிபர் எர்டோவான் கூறினார்.

Exit mobile version