Site icon Tamil News

ஆதரவாளர்களை ஏமாற்றி விட்டு இரகசியமாக வெளியேறிய ட்ரம்ப் !

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தேர்தல் பரப்புரையின் இடையே தமது ஆதரவாளர்களுக்கு உணவு இலவசம் என அறிவித்துவிட்டு, பின்னர் பணம் தராமல் உணவகத்தில் இருந்து ரகசியமாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். முதலில் மியாமி நீதிமன்றம் வரை சென்ற டொனால்டு ட்ரம்ப், சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து தமது ஆதரவாளர்களுடன் Little Havana பகுதிக்கு சென்ற ட்ரம்ப் அங்குள்ள புகழ்பெற்ற Versailles உணவகத்திற்கு சென்றுள்ளார். புதன்கிழமை அவரது பிறந்தநாள் என்பதால், ஆதரவாளர்களில் சிலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதில் மகிழ்ந்துபோன ட்ரம்ப், திரண்டிருந்த தமது ஆதரவாளர்கள் அனைவருக்கும் உணவு இலவசம் என அறிவித்துள்ளார். இதனை நம்பி பலர் அந்த உணவகத்தில் இருந்து சாப்பிட்டுள்ளனர்.ஆனால் திடீரென்று டிரம்ப் மற்றும் அவரது குழு அங்கிருந்து ரகசியமாக வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பலரும் சாப்பிடவில்லை எனவும், 10 நிமிடம் மட்டுமே ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் அங்கிருந்ததாகவும் கூறுகின்றனர்.

ஆனால் உணவு இலவசம் என அறிவித்துவிட்டு, ட்ரம்ப் மற்றும் ஆவரது குழுவினர் வெளியேறியது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. Versailles உணவகம் சார்பில் தெரிவிக்கையில், அந்த நேரத்தில் அங்கிருந்தவர்கள் அனைவரும் தங்கள் உணவிற்கு தாங்களே பணம் செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.மட்டுமின்றி, ட்ரம்ப் உணவு எதையும் அங்கிருந்து சாப்பிடவில்லை எனவும் நியூயார்க் புறப்படும் வழியில் வேறு உணவு சாப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ட்ரம்ப் தரப்பில் தெரிவிக்கையில், அவரது ஆதரவாளர்கள் அனைவரும் உணவகத்திற்கு வெளியே நின்றிருந்ததாகவும், அவர்கள் உணவு சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பலருக்கும் உணவுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Exit mobile version