Tamil News

தீயாக பரவிய திருமண செய்தி… த்ரிஷா கொடுத்த பதிலடி

நடிகை த்ரிஷா மலையாள தயாரிப்பாளரை விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக திடீரென வதந்தி ஒன்று தேசியளவில் பரவிய நிலையில், அதிரடியாக அதுகுறித்து ட்வீட் போட்டு வெளுத்து வாங்கி உள்ளார் நடிகை த்ரிஷா.

20 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் த்ரிஷா விஜய்யின் லியோ படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் த்ரிஷா தான் ஹீரோயின் எனக் கூறுகின்றனர்.

மேலும், மலையாளத்தில் மோகன்லால், டொவினோ தாமஸ் உள்ளிட்ட டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். சில ஹீரோயின் சென்ட்ரிக் படங்களும் ரிலீஸுக்கு ரெடியாக காத்திருக்கின்றன.

இந்நிலையில், தன்னை பற்றிய திருமண வதந்தி காட்டுத் தீ போல பரவி வரும் நிலையில், அதிரடியாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது செம காட்டமாக த்ரிஷா போட்டுள்ள ட்வீட் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “DEAR “YOU KNOW WHO YOU ARE AND YOUR TEAM”, “KEEP CALM AND STOP RUMOURING” CHEERS!” (நீயாரு.. உன் டீம் யாருன்னு தெரியுதா.. KEEP CALM அப்புறம் தேவையில்லாத வதந்தியை பரப்ப வேண்டாம்) என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version