Site icon Tamil News

ஸ்பெயினில் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட துயரம்! குடும்பத்தினர் விடுத்துள்ள கோரிக்கை

ஸ்பெயினில் 18 வயதான Bryony Duthie என்ற இளம்பெண் , சிறுநீரகப் பிரச்சனையால் கோமா நிலைக்குத் சென்று ஆபத்தான நிலையில் உள்ளார்,

அவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்கா £13,000 க்கும் அதிகமான மருத்துவ கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது.

நாள்பட்ட சிறுநீரகப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை கோஸ்டா டெல் சோலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குறித்த இளம்பெண் அழைத்துச் செல்லப்பட்டார்,

பிரையோனிக்கு தேவைப்படும் டயாலிசிஸ் காரணமாக நாளொன்றுக்கு செலவுகள் ஆயிரக்கணக்கான பவுண்டுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

இதனால் குடும்ப உறுப்பினர்கள் அவரது மேலதிக சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகின்றனர்.

எதிர்வரும் புதன் கிழமைக்குள் £15,000 க்கு மேல் நன்கொடையாக அளித்ததால், செலவை ஈடுகட்ட முடியும் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்காக GoFundMe என்னும் இணைய பக்கத்தின் ஊடாக நிதியுதவி அளிக்குமாரு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version