Site icon Tamil News

கடலுக்கடியில் 100 நாட்கள் தங்கியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் டிடூரி( Dr. Joseph Dituri ) என்ற நபர் 100 நாட்கள் கடலுக்கடியில் தங்கியிருந்து, நீருக்கடியில் நீண்டகாலம் வாழ்ந்த நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

முன்னாள் இராணவ வீரரும் பல்கலைக் கழகப் பேராசிரியருமான இவர், நீருக்கடியில் நிலவும் உயர் அழுத்தத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராயும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து புளோரிடா மாநிலம் அருகே கடலுக்கு அடியில் 30 அடி ஆழத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட 100 சதுரடி அறையில், 100 நாட்கள் தங்கியிருந்து தனது ஆய்வினை மேற்கொண்டார்.

இந்நிலையில் 100 நாட்களின் பின்னர் கடந்த வெள்ளிக் கிழமை தனது ஆய்வினை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஸ்கூபா டைவர்களின் உதவியுடன் வெளியே வந்தார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர் ” நீருக்கு அடியில் இருந்ததால் எனது உயரம் அரை இன்ச் அளவு குறைவடைந்ததைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தே.அத்துடன் உடலில் உள்ள கொலஸ்ரோலின் அளவும் குறைந்துள்ளது ” என்றார்.

மேலும் அடுத்து உயரழுத்தத்தால் வயது முதிர்வை தாமதப்படுத்த முடியுமா? என்பது குறித்த ஆய்வினை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version