Site icon Tamil News

சீனாவில் லைவில் 10 கிலோ உணவை உட்கொள்ள முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

சீனாவில் லைவ் ஸ்ட்ரீமில் 10 கிலோ உணவை சாப்பிட முயன்ற பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பொதுவாக சமூகவலைத்தளங்களில் லைவ் ஸ்ட்ரீமில் Mukbang உணவுகளை உண்ணுவது வழக்கம். இதனை  மில்லியன் கணக்கான மக்கள் பார்வையிடுவர்.

அவ்வாறாக சீனாவை சேர்ந்த  24 வயதான Pan Xiaoting என்ற பெண் ஒருவர் நேரலையில் 10 கிலோ எடையுள்ள உணவை உட்கொள்ள முயற்சித்துள்ளார்.

மருத்துவர்கள் மற்றும், குடும்ப உறுப்பினர்களின் எச்சரிக்கையை மீறி அவர் இதனை செய்துள்ளார்.

இதன்போது நேரம் முடிவடைவதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்துள்ளார். மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு செரிமானப் பிரச்சினை இருந்தது தெரியவந்துள்ளது.

இவ்வாறான வீடியோக்கள் மற்றவர்கள் மத்தியில் தவறான உதாரணங்களாக காட்டப்படுவதாகவும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இதனை நிறுத்த கோரியும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Exit mobile version