Site icon Tamil News

4 ஆயிரத்திற்கு கொள்வனவு செய்த நாற்காலியை 82 இலட்சத்திற்கு விற்ற டிக்டொக் பிரபலம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் மில்லர் என்ற டிக்டொக் பிரபலம், பேஸ் புக் பக்கத்தில் 50 டொலர் கொடுத்து கொள்வனவு செய்த நாற்காலியை 82 இலட்சத்திற்கு ஏலத்தில் விற்றுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

டிக்டாக் பிரபலமான ஜஸ்டின் மில்லர் பழம்பொருட்கள் மீது ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் எதேச்சையாக அவர் ஆன்லைன் தளமான பேஸ்புக் மார்க்கெட்டில் ஒரு பழமையான நாற்காலியை 50 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 ஆயிரம்) வாங்கி உள்ளார்.

பின்னர் அந்த நாற்காலியை சீரமைக்க 2.5 இலட்சம் ரூபாவை செலவு செய்துள்ளார். அதன்பிறகு   பழம்பொருட்களை விற்பனை செய்யும் ஏல நிறுவனத்தில் நாற்காலியை கொண்டு சென்றுள்ளார்.

பழமையான அந்த நாற்காலியை வாங்க கடும் போட்டி ஏற்பட்டது. கடைசியில் அந்த நாற்காலி 1 லட்சம் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.82 லட்சம்) ஏலம் போனது.

இதனால் மகிழ்ச்சியில் திளைத்த அவர் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version