Site icon Tamil News

அமெரிக்காவில் பீரால் இயங்கும் மோட்டார் சைக்கிளை கண்டுப்பிடித்த இளைஞர்!

அமெரிக்கா மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த கே மைக்கல்சன் என்பவர் பீரால் இயங்கும் மோட்டார்சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

மணிக்கு 240 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த பைக்கிற்கு எரிபொருளுக்கு பதிலாக பீர் பயன்படுத்தப்படுகிறது.  கூடுதலாக வெப்பமூட்டும் சுருளுடன் 14-கேலன் கெக் கொண்டு இயக்கப்படுகிறது.

இந்த சுருள் பீரை 300 டிகிரி வரை சூடாக்குகிறது. பின்னர் அது பைக்கை முன்னோக்கி நகரச் செய்யும் முனைகளில் அதிக வெப்பமான நீராவியாக மாறி இயக்குகிறது.

முன்னதாக ராக்கெட்- பவர்டு கழிப்பறை ஜெட் பவர்டு காபி பாட் ஆகிய கருவிகளை கே மைக்கேல்சன் உருவாக்கினார்.

Exit mobile version