Site icon Tamil News

கிழக்கு மக்களை சுரண்டி வாழும் தொண்டமான் பரம்பரையினர் : பிரபாகரன் கருத்து!

மலையக மக்களின் இரத்ததினை உறுஞ்சி சுகபோகம் அனுபவித்துவந்த தொண்டமான் பரம்பரையினர் இன்று கிழக்கில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுரண்டி வாழும் நிலையுள்ளதாகவும் அதனை ஜனாதிபதி ஒருபோதும் அனுமதிக்ககூடாது எனவும் ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன்  தெரிவித்துள்ளார்.

செந்தில் தொண்டமான் இந்தியாவுடன் நெருங்கியவர் அவர் கிழக்கில் ஏதாவது அபிவிருத்தி செய்வார் என்று ஜனாதிபதி இவரை நியமித்தார் ஆனால் இவர் கிழக்கில் கொள்ளையடிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றார்.

இவர் வாகரையில் பாம் ஒயில் கம்பனி எனும் பெயரில் பல ஏக்கர் காணிகளை கொள்ளையிடுகின்றார். கட்டு முறிவில் இருந்து மாங்கேணி வரை இறால் வளர்ப்பிற்காக 1100 ஹெக்டேயருக்கு மேற்பட்ட காணிகளை ஆளுனர் கொள்ளையிட முயற்சிக்கின்றார். இதனால் சுமார் 4000 மீனவ குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவது இவருக்கு தெரிவதில்லையா?
தொண்டமான் குடும்பம் தொடர்ச்சியாக மற்றவர் செய்கின்ற வேலைத்திட்டங்களுக்கு போய் போஸ் கொடுப்பதையே செய்து வருகின்றனர்.

அட்டைக்கு தங்களது இரத்தத்தை கொடுக்கும் மலையக மக்களிடம் 333 ரூபா மாத சந்தாவாக பெற்று அந்த மக்களிடம் பல கோடி பணத்தை தொண்டமான் பரம்பரையினர் கொள்ளையிடுகின்றனர். இதேபோன்றுவாகரையில் கண்டல் தாவரம் நடும் போர்வையில் பல இலட்சங்களை கொள்ளையிட முயற்சிக்கின்றார். அரச அதிகாரிகளை அச்சுறுத்தி காணிகளை இந்த ஆளுநர் கொள்ளையிடுகின்றார் என்பது உண்மை.

1993 ஆண்டு அமைச்சர் அவையின் அங்கிகாரத்துடன் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக இருந்து வந்திருந்த நிலையில் தற்போது அது உப பிரதேச செயலகமாக மாற்றியிருக்கின்றார்கள்.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை ஆளுநர் செந்தில் போய் சந்தித்துள்ளாரா.
மாங்கேணியில் செந்தில் தொண்டமானின் கட்சியை சார்ந்தவருக்கு பல ஏக்கர் காணி வழங்கப்படுகிறது அதை தடுக்க இங்கு எந்த அரசியல்வாதியும் இல்லை.

மக்களுக்கு சேவை செய்ய வந்த நாங்கள் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும்.
வாழைச்சேனை காகித ஆலை 300 பேருடன் இயங்கி வந்த நிலையில் தற்போடு 150 பேர்தான் வேலை செய்கிறார்கள், அங்கு இருந்த இயந்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வெளிநாட்டு பணத்தை கொண்டு வந்து இங்கு அபிவிருத்தி செய்ய சொல்லுவாரே தவிர, கிழக்கில் உள்ள காணிகளை விற்பதற்கு ஜனாதிபதி ஒரு பேதும் அனுமதித்திருக்க மாட்டார், இவர் ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தியே இவர் கிழக்கு மாகாண காணியை கொள்ளையிட்டு விற்பனை செய்கின்றார்.

ஜனாதிபதி உடன் கவனத்தில் கொண்டு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். கடந்த கால வரலாற்றை நாம் எடுத்து பார்க்க வேண்டும், கோட்டா ஜனாதிபதியாக வந்ததற்கு தமிழர்களின் வாக்குகளா வழி வகுத்தது.

இன்று விலைவாசி அதிகரித்து கானைப்பட்டாலும், இன்னுமொரு 5 வருடம் ரணிலுக்கே கொடுத்து பார்ப்பம் அவர் செய்யாவிடின் அவரை நாம் ஐந்த வருடத்தில் திரத்திவிடுவம். 20 இலட்சம் வாக்கை பெறும் ஒருவரை தமிழ் வேட்பாளராக போடுவிங்களானால் அது சரி வரும் ஆனால் அப்படி நடைபெறுவதில்லையே” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version