Site icon Tamil News

மீண்டும் நாட்டில் வரிசை யுகம் ஏற்படும் அபாயம்! சி.கா.செந்தில்வேல்

எதிர்வரும் காலத்தில் நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்பட உள்ளது. அண்மையில் பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனின் ஒரு பகுதி மீள வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நிச்சயமாக நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்பட சாத்தியம் உள்ளது. வரிசை ஏற்படும் அபாயம் தற்பொழுது தலைதூக்க வழி கோருகின்றது என புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்தார்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

இந்த ஆட்சியாளர்கள் மக்களிடம் கூறியது என்னவென்றால் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் சர்வதேச நாணய நிதி கிடைத்தவுடன் நாங்கள் இலங்கையை சொர்க்க மாக்குவோம் என கூறியிருந்தனர்.

உண்மையில் அதுவல்ல பிரச்சனை. 2.9 பில்லியன் அமெரிக்க டாலரின் ஒரு பகுதியை தான் சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருந்தது

முழுக் கடனையும் அடைப்பதற்கு அவர்கள் வழங்கி இருக்கவில்லை. இவர்கள் தொடங்கும் கடன் வாங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

வேறு வேறு நாடுகள் வேறு வேறு அமைப்புகள், ஊடாக கடன் வாங்குகின்றார்கள் தவிர கடன் கொடுப்பதாக இல்லை.

தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைதான் உள்நாட்டு கடனை மறுசீரமைக்கின்றோம் என்பது.

இந்த இடிஎஃப் இ பி எஃப் போன்ற மிகப்பெரிய நிதி இருக்கின்ற இடத்தில் கை வைத்துள்ளார்கள்.
அது எடுக்கப்பட்டால் இந்த மக்களுக்கு எதுவுமே இல்லை.

இந்த ஆட்சியாளர்கள் ஒரு கடனை அடைப்பதற்கு மேலும் பல கடன்களை பெறுகின்றார்கள்.
இந்த ஆட்சியாளர்கள் வாங்குகின்ற வேலையைத்தான் செய்கின்றார்கள்.

ஏன் என்றால் நாட்டினுடைய உற்பத்தி , இந்த மக்கள் இணைந்து உற்பத்தியை பெருக்கினால் மட்டுமே இவர்கள் இந்த கடனில் இருந்து தவற முடியும் என்பது நிதர்சனம். இதன் மூலம் தான் தேசிய பொருளாதாரத்தை படிப்படியாக கட்டி அமைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version